புத்தளம் - கரைத்தீவு அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கிராம சேவையாளர்களாகத் தெரிவு
ரஸீன் ரஸ்மின்
கரைத்தீவு அஹதிய்யா பாடசாலையில் கடமை புரியும் சிரேஷ் ஆசிரியைகளான PMF. ஸப்னா மற்றும் MI.F.இம்ரானா ஆகிய இரு ஆசிரியைகளும் கிராம சேவையாளர் போட்டிப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்துள்ளனர்.
கிராம சேவகர் பரீட்டையில் சித்தியடைத்த குறித்த இரு ஆசிரியைகளும், நேர்முகப்பரீட்சைக்கு முகம் கொடுத்து ஆசிரியர் சேவைச்சான்றிதழ்கள் மூலம் மேலதிக புள்ளிகளைப் பெற்று தெரிவு செய்யப் பட்டுள்ளார்கள் .
அஹதிய்யா பாடசாலையில் சேவையாற்றியதால் இது அவர்களுக்குக் கிடைத்த சன்மானமாகும்.
புத்தளம் மாவட்டத்தில் அஹதிய்யா ஆசிரியைகள் கிராம சேவையாளர்களாக தெரிவுசெய்யப்பட்டது இது முதலாவது சந்தர்ப்பமாகும்.
இருவருக்கும் எமது புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனம் மற்றும் கரைத்தீவு அஹதிய்யா பாடசாலை சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரூக் பதீன் ஆசிரியர்
அகில இலங்கை அஹத்திய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் தேசிய பிரதித் தலைவர்
No comments