புத்தளம் மாவட்டத்தில் முதலாம் இடத்தை கொத்தான்தீவு பாடசாலை மாணவி ஹானிம் பெற்று வரலாற்றுச் சாதனை
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புத்தளம் மாவட்டத்தில் தமிழ்மொழி மூலம் கலைப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை கொத்தான்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி மொஹமட் பஸ்லுல் பாரீஸ் ஹானிம் பெற்றுள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக கொத்தான்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவி மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்றது இதுவே முதல் முறை எனவும் 3 ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் இவரின் இஸட் புள்ளிகள் 2.1417 ஆக காணப்படுகிறது.
இவருக்கு பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், உயர்தர அபிவிருத்தி குழு, பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவ மாணவிகள் சங்கம், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், கொத்தாந்தீவு கட்டார் அமைப்பு, ஸதக்கத்துல் ஜாரிய அமைப்பு, கொத்தாந்தீவு குவைட் அமைப்பு, கொத்தான்தீவு பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் மாணவ, மாணவிகள் என சகலரும் தமது வாழ்த்துக்ஙளை தெரிவிப்பதாக பாடசாலையின் அதிபர் கே.டி ஹாறூன் தெரிவிக்கின்றார்.
No comments