கற்பிட்டி அல் ஹிரா பாடசாலையின் அதிபர் அஸ்ரப் அலி 36 வருட ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ எம் சனூன்)
கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம் அஸூரபு அலி என்று அழைக்கப்படும் அதிபர் சேவை தரம் - 1 ஐச் சேர்ந்த அஸ்ரப் அலி அதிபர் 36 வருட ஆசிரியர் சேவையிலிருந்து 2024 /06/01 ஓய்வு பெறுகின்றார்.
இவர் ஆரம்ப கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை அல் அக்ஸா தேசிய பாடசாலையில் கல்வி கற்றூள்ளார், உயர் கல்வியை விஞ்ஞானப் பிரிவில் கற்று அதனை கைவிட்டு நண்பர்களின் உதவியுடன் சுயமாக கலைப்பிரிவு பாடங்களை நான்கரை மாதத்தில் கற்று இறைவனின் உதவியால் 1987 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இவர். அன்று நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத யுத்த சூழ்நிலை காரணமாக பட்டப்படிப்பை இடையில் கைவிட்டுவிட்டார்.
எனினும் இவரின் தொடர் முயற்சியின் பலனாக 1989. 09.15 இல் ஆசிரியர் நியமனம் பெற்றார் .
தனது முதல் ஆசிரியர் நியமனத்தை கீரிமுந்தல் டச்பே றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் பெற்று 1989.09.15 தொடக்கம் 1991. 07.31 வரை கடமையாற்றிய அவர், 1991.08.01 முதல் கற்பிட்டி முஹத்துவாரம் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இடம் மாற்றம் பெற்று அங்கு 1998. 06.28 வரை சுமார் ஏழு வருடங்கள் ஆசிரியராக கடமையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 1998.06.29 இல் இருந்து 2000.08.03 வரை உதவி ஆசிரியராகவும் பதில் அதிபராகவும் கற்பிட்டி கண்டல்குடா முஸ்லிம் வித்தியாலயம் கடமையாற்றிய இவர் 2000.08.04 தொடக்கம் SLPS iii தரம் பெற்று அதிபராக கண்டக்குடா பாடசாலையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் 2004.11.13 இல் SLPS ii தரத்தையும் 2004.11.13 இல் SLPS i தரத்தையும் பெற்றுக் கொண்டதுடன் 2014.03.06 வரை கண்டல்குடா முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமையாற்றினார். தொடர்ந்து 2014.03.07 தொடக்கம் 2020.02.06 வரை கற்பிட்டி பள்ளிவாசல்துறை முஸ்லிம் வித்தியாலயத்தில் உதவி அதிபராகவும் கடமை புரிந்தார். அடுத்து கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலை அதிபராக 2020.02 06 பொறுப்பேற்று ஓய்வு பெறும் வரை கடமையாற்றியுள்ளார்.
மேற்படி அதிபரின் 36 வருட ஆசியர் சேவையை பாராட்டி கௌரவிக்கும் முகமாக இன்று கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர்களால் பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments