Breaking News

இவ்வருடம் க.பொ.த.சாதாரண தரம் பரீட்சை எழுதிய புத்தளம் மாணவர் மின்சார தாக்குதலில் மரணம்.

(புத்தளம் எம்.யூ.எம் சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் மின்சார தாக்குதலுக்கு உட்பட்டு புத்தளம் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (30) காலை உயிரிழந்தார்.


புத்தளம் ஐந்தாம் குறுக்குத் தெருவில் வசித்து வந்த இம்மாணவர் 2024 இற்கான க.பொ.த. சாதாரண தரம் பரீட்சையை கடந்த மாதம் நிறைவு செய்திருந்தார்.


கடந்த வாரம் தனது வீட்டில் குளித்து விட்டு முடி உலர்த்தி மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே இவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி புத்தளம் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இவரது மரண விசாரணைகளை மேற்கொண்ட புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிசாம், மின்சாரம் தாக்குதலினால் ஏற்பட்ட மரணம் என தீர்ப்பளித்து ஜனாஸாவை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.


இவரது ஜனாஸா வியாழக்கிழமை இரவு புத்தளம் பகா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.








No comments

note