Breaking News

பத்துளுஓயா ஊர் மக்களின் மையவாடியை சீர் செய்ய உதவி கோரல்

புத்தளம் மாவட்டம் ஆராய்ச்சிக்கட்டு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பத்துளுஓயா   சுமார் 210 முஸ்லிம் குடும்பங்களைக் கொண்ட ஒரு சிறிய ஊராகும். பத்துளுஓயாவில்  மூவின மக்களும் வாழ்கின்றனர்.


 இவ் ஊரில் எத்தனையோ பல வசதிகள் இருந்த போதிலும், முஸ்லிம் மக்கள் முகம் கொடுக்கும் பாரியதொரு பிரச்சினை தான் முஸ்லிம்களின் மையவாடி பிரச்சினை. பத்துளுஓயா ஊருக்கான மையவாடி பத்துளுஓயா புகையிரத கடவைக்குப் பின்னால் பத்துளுஓயா ஆற்றுக்கு பக்கத்தில் அமைந்திருப்பதினால் மழைக் காலங்களில் முழுமையாக மையவாடி நீரில் மூழ்கிவிடுவதுடன் சுமார் 6 அடி வரை  மையவாடிக்குள் நீர் காணப்படும். இதற்கான பாதையும் மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.


 மழைக் காலங்களில் மாற்று வழியின்றி ஜனாஸாக்களை அடக்கம் செய்ய பக்கத்து ஊர்களுக்கும் எடுத்துச் செல்லும் நிலையும் ஏற்படுகின்றது.


எனவே மேற்படி பத்துளுஓயா ஊரின் மையவாடியை சீர் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு அரசியல் வாதிகளிடமும் தனவந்தர்களிடமும் ஊர் மக்கள் வேண்டுகின்றனர்.


தொடர்பு கொள்ள 

தலைவர் அல்ஹாஜ் M. ரமீஸ் - 071550 0691

மஸ்ஜித் இமாம் N.M. நபீல் (லுக்மானி) - 0763240852



(புளிச்சாக்குளம் - புதுக்குடியிருப்பு) 

M. ஹபீல் நிஜாமுதீன் (கபூரி,JP)






No comments

note