JobVibe.lk - Sri Lanka Job Portal

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து  காணப்படுவதனால்  நிலவுகின்ற காற்றும் மழையுடனான  வானிலையும் மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென்  மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்  நுவரேலியா மாவட்டத்தின்  சில இடங்களிலும் சுமார் 100 mm இலும் கூடிய  பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஊவா மாகாணத்தின்  சில இடங்களிலும் அத்துடன் அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும்  மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய  மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 


மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும்  தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மொனராகலை  மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 ‐ 60 km வேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக்கூடும்.


தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து காணப்படுவதனால் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஆகையினால் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். 

 

புத்தளம்  தொடக்கம் கொழும்பு ஊடாக மாத்தறை  வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் காணப்படும். 


கற்பிட்டி தொடக்கம்  கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான  கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும். ஆகையினால் கற்பிட்டி தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களை அண்மித்த கரையோரத்திற்கு கடல் அலைகள் உட்புகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,  

சிரேஸ்ட  வானிலை அதிகாரி.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال