அபுஹர் முஹம்மது அஸ்பர் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்
அரபாத் பஹர்தீன்
கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த அபுஹர் முஹம்மது அஸ்பர் சட்டத்தரணியான உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இன்று (03) சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புத்தளமாவட்ட முன்னாள் திட்டமிடல் உதவியாளராக கடமையாற்றியிருந்தார்.
மேலும் இலங்கை பேராதனை பல்கலைக் கழகத்தின் கலைத்துறைப் பட்டதாரிப் பட்டத்தினையும், சட்டமானிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்ட இவர், இப் பிரதேசத்தின் பல்வேறு அமைப்புக்களின் முக்கிய பதவியினை வகிந்து வருகின்றதுடன் பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
மன்னார் எருக்கலம்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹும் அபுஹர் மற்றும் தலைமன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஹசீனா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments