2024 ம் ஆண்டிற்கான உலக பத்திரிகை சுதந்திர விருதிற்கு பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் தெரிவு
காசா மோதல் குறித்த செய்திகளை செய்தியறிக்கையிடுவதில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்திவரும் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பிற்காக 2024 உலக பத்திரிகை சுதந்திர விருதிற்கு பாலஸ்தீன பத்திரிகையாளர்களை யுனெஸ்கோ தெரிவு செய்துள்ளது.
பெரும் ஆபத்து காணப்படுகின்ற போதிலும்தொடர்ந்து செய்தியறிக்கையிடலில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீன பத்திரிகையாளர்களிற்கு ஆதரைவையும் அங்கீகாரத்தையும்; வழங்குவதற்காக இந்த விருது அவர்களிற்கு வழங்கப்படுகின்றது என விருது தெரிவுக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடினமான ஆபத்தான சூழ்நிலைகளின் மத்தியில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்தும் துணிவை யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஆட்ரிஅசோலே பாராடடியுள்ளார்.
ஒக்டோபரில் மோதல் ஆரம்பித்த பின்னர் 97 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
( நன்றி - இணையம்)
No comments