Breaking News

புத்தளத்தில் நோன்புப் பெருநாளை சிறப்பிக்கும் முகமாக பாரம்பரிய விளையாட்டு விழா

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ எம் சனூன்)

புத்தளம் தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய விளையாட்டுக்களை உயிர்ப்பூட்டும் வகையில் நோன்புப் பெருநாள் விளையாட்டு விழாவை 2024/05/03 ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 04 மணிமுதல் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற உள்ளது. 


இவ்விளையாட்டு விழாவில் சிறுவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களான  பனீஸ் சாப்பிடல், பலூன் உடைத்தல், தண்ணீர் நிரப்புதல், தொப்பி மாற்றுதல்,  கரண்டியில் தேசிக்காய், என்பவற்றுடன் சாக்கோட்டம், ஆள்தூக்கி ஓட்டம் என பல்வேறு பாரம்பரிய போட்டி நிகழ்வுகள் இடம்பெற்று பெருமதியான பரிசில்கள் வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




No comments