கற்பிட்டியில் ஒரே நாளில் இடம்பெற்ற மூன்று இப்தார் நிகழ்வுகள்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
கற்பிட்டியில் திங்கட்கிழமை (01) ஒரே நாளில் மூன்று இப்தார் நிகழ்வுகள் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்றது.
கற்பிட்டி தில்லையூர் பாடசாலையின் நிர்வாத்தினரின் ஏற்பாட்டில் அதிபர் எஸ் எம் அருஸ் தலைமையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் பாடசாலை ஆசியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் தில்லையூர் பள்ளிவாசல் பேஷ் இமாம் றிப்கான் மௌலவி மற்றும்
நிர்வாக உறுப்பினர்கள் , நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
மற்றுமொரு இப்தார் நிகழ்வு கற்பிட்டி காட்டுபாவா பள்ளிவாசலில் பரிபாலன சபையின் தலைவர் எம்.அஜ்மல் தலைமையில் இடம்பெற்றது இதில் ஊர் ஜமாஅத்தார்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதே தினம் மற்றுமொரு இப்தார் நிகழ்வு கற்பிட்டி கோட்டக் கல்வி காரியத்தில் அதன் பணிப்பாளர் தீப்தி பெர்ணான்டோ தலைமையில் இடம்பெற்றது. இதில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசியர் ஆலோசகர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
No comments