இலங்கையின் தேசிய மாணவர் பாராளுமன்றதின் முதல் அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விமர்சயாக 2024.03.26 அன்று நடைபெற்றது.
இதில் புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதுத்துவப்படுத்தி தூய தேசத்திற்கான இயக்கத்தின் இளம் தலைவர்களில் ஒருவரும் புத்தளம் - தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவருமாகிய கே. எம். சாதிக் பங்குபற்றினார்.
இவர் பாடசாலை மட்டத்திலும், வலைய மட்டத்திலும் பிரதமராகவும், மாகாண மட்டத்தில் பாடசாலைகளுக்கு இடையிலான நட்புறவை கட்டிஎழுப்பும் அமைச்சராகவும், தேசிய மட்டத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.







