(எம் எச் எம் சியாஜ், எம்.யூ.எம்.சனூன்)
பாலாவி பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் ஒருங்கிணைப்பில் கொழும்பு எஸ்.எல்.சீ.டி.எப் (SLCDF) மற்றும் பள்மேரா PALMERA ஆகிய நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் புத்தளம் மாவட்டத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சிறு முயற்சியாளர்களான பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சுய தொழில் உதவிகளான உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் காசோலைகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (10) பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் பயிற்சி நிலையத்தில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜூவைரியா முகைதீன் தலைமையில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் தலைவி ஹபீபா மொஹமட் றிஸ்மி, நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் எஸ் சுமித்ரா, நிறுவனத்தின் பொருளாளர் பஹீமா பேஹம்,
வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச். நியாஸ்,
நீதிமன்றத்தின் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர், ஏ.சி.அஸாருதீன். உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
டித்வா புயல் அனர்த்தத்தால் புத்தளம் மாவட்டத்தில் தங்களது சுய தொழில் பாதிப்புக்குள்ளானவர்களில் தொழில் பதிவு செய்யப்படாதவர்களை முதன்மைப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் ஒருங்கிணைப்பில் எஸ் எல் சீ டி எப் மற்றும் பள்மேரா (SLCDF, PALMERA) ஆகிய நிதி நிறுவனங்களின் பங்களிப்புடன் முதற்கட்டமாக 21 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் இரண்டாம் கட்டமாக 29 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் ஆக 30 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவித் திட்டம் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது
பெண்களின் பொருளாதார வலிமையையும் சமூக முன்னேற்றத்தையும் இலக்காகக் கொண்டு, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீள கட்டியெழுப்புவதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் நிர்வாகத்தினர் செயல்பட்டு வருவதாக கள உத்தியோகத்தர் டி சமீமா தெரிவித்தார்
.
























