Breaking News

கற்பிட்டி அல் அக்ஸா பாடசாலையில் வெற்றிகரமான மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணி

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட சிரமதான பணி பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எப் சாஜினாஸ் தலைமையில் இடம்பெற்றது.


இச் சிரமதான பணிக்கு பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பன முழுமையான பங்களிப்பை வழங்கியதுடன் பாடசாலையின் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் மற்றும் பழைய மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இச் சிரமதான பணியில் கலந்து கொண்டு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.


அல் அக்ஸா தேசிய பாடசாலையின் சுற்றுப்புறச் சூழலை முழுமையாக சுத்தப்படுத்தி நீண்ட விடுமுறையின் பின் பாடசாலைக்கு சமூகமளிக்கும் மாணவர்களின் மனங்களில் புத்துணர்ச்சியும் உத்வேகமும் ஏற்படச் செய்யும் வகையில் பாடசாலையின் சுற்றுப்புறச் சூழலை சிரமதானத்தின் ஊடக  ஏற்படுத்தி தந்தமைக்கு பாடசாலையின் நிர்வாகம் சார்பாக இச் சிரமதான பணியில் பங்குபற்றிய மற்றும் இதற்கு உதவிகள் ஒத்தாசைகள் வழங்கிய சகலருக்கும் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும்தெரிவித்துக் கொள்வதாக பிரதி அதிபர் எஸ் எம் சாஜினாஸ் தெரிவித்தார்.






No comments