கற்பிட்டி அல் அக்ஸாவின் சிரமதான பணிக்கு அழைப்பு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெறும் சிரமதான பணியில் பாடசாலையின் சகல பெற்றோர்கள் பழைய நமாணவர்கள் நலன் விரும்பிகள் என சகலரையும் கலந்து கொள்ளுமாறு கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எப் சாஜீனாஸ் அறிவித்துள்ளார்.
நீண்ட விடுமுறைக்கு பின்னர் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் பாடசாலையின் சுற்றுப்புறச் சூழலில் சிரமதானம் மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது. இதன் அடிப்படையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் ஒத்துழைப்புடனும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி தொடக்கம் பி.ப 12.30 மணி வரை நடைபெறும் மேற்படி சிரமதான பணிக்கு சகலரினதும் வருகை வரவேற்கப்படுகின்றது.
No comments