Breaking News

மர்ஹூம் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.முனீர் அவர்களது நினைவுகளை சுமந்து வரும் "நினைவுகளில் உஸ்தாத் முனீர்" என்ற புத்தக வெளியீட்டு விழா

 (எம்.யூ.எம்.சனூன்,எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் இஸ்லாஹிய்யா  பெண்கள் அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மர்ஹூம் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.முனீர் அவர்களது நினைவுகளை சுமந்து வரும் "நினைவுகளில் உஸ்தாத் முனீர்" என்ற புத்தக வெளியீட்டு விழா 29 ம் திகதி திங்கட்கிழமை இரவு 07 மணிக்கு புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. 


உஸ்தாத் முனீர் அவர்களின் மறைவையொட்டி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அனுதாப செய்திகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவர இருக்கின்றது.


இந்த நூலினை புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி நிர்வாகம், கல்வி மேம்பாட்டுக்கும் சீர்திருத்தத்துக்குமான புத்தளம் கல்வியியலாளர்களின் மன்றம் (பில்லர்ஸ்), உஸ்தாத் முனீர் அவர்களது நண்பர்கள் வட்டம் ஆகியன இணைந்து வெளியிட இருக்கின்றன.




No comments

note