ஜனாஸா அறிவித்தல் - கடையாமோட்டையைச் சேர்ந்த அஸ்மா உம்மா அவர்கள் காலமானார்.
கடையாமோட்டையைச் சேர்ந்த காலம் சென்றவர்களான சேகுவரிசை, செய்தூன் உம்மா ஆகியோரின் அன்பு மகள் அஸ்மா உம்மா இன்று (05) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் காலம் சென்ற பாகிர் மௌலவி (கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஓய்வுபெற்ற முன்னாள் ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், இஸ்ஸதுல் முனவ்வரா, மௌலவி சரூக் (கபூரி), மெகருன்னிஸா, நளீர் (மதுரங்குளி வெஸ்ட்டேர்ன் பாமசி), ஜாபிர், ஹாரிஸ், அஜ்மல், மௌலவி சௌக்கி (கபூரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்
அப்துல் கரீம், அப்துல் கபூர், காலம் சென்ற இப்றாஹிம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாரூக், முஹம்மது, மௌரினா, பௌமியா, றினோஸா, பஜிலா, முபீஸா, றியாஸா ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (06) காலை 7.00 மணிக்கு கடையாமோட்டை ஜும்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.
No comments