JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் - விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் போட்டி!.

புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட விருதோடை  முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை அல்ஹாஜ் எம்.எம். முபாரக் விளையாட்டு  மைதானத்தில் இடம்பெறவுள்ளது.


பாடசாலையின் அதிபர் என்.எம்.எம். சதாத்  தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில்  கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.


எனவே உங்கள் அணைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.


காலம் :-   07/03/2024  வியாழக்கிழமை


நேரம்  :-   பி.ப.  2.00  மணிக்கு 


இடம்   :-   அல்ஹாஜ் M.M.முபாரக் விளையாட்டு மைதானம்


இந்நிகழ்வு மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக நேரலையாக இடம்பெறவுள்ளது.


காணத்தவறாதீர்கள்...

👇👇👇👇👇

https://www.facebook.com/madurankulimedia?mibextid=ZbWKwL






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال