JobVibe.lk - Sri Lanka Job Portal

லெஜென்ட்ஸ் சூப்பர் லீக் கால்பந்தாட்ட தொடரில் கொழும்பு கெடேரியன் கழகம் சம்பியன்

 (எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் ஸ்தாபகர் முஹம்மது யமீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற லெஜென்ட்ஸ் சூப்பர் லீக் கால்பந்தாட்ட தொடரில் கொழும்பு கெடேரியன் கழகம் சம்பியன் ஆகியது.


இந்த போட்டி தொடர் அண்மையில் (02) புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றது. 


அணிக்கு 09 பேர்களை கொண்ட 08 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் புத்தளம் லிவர்பூல் கழகம், புத்தளம் நியூ ஸ்டார்ஸ் கழகம், திருகோணமலை ட்ரின்கோ எப்.சி, குருநாகல் கார்டியன் எப்.சி, 

கலகெதர எவர்கிரீன் கழகம், கண்டி

லைட் இன்பென்ட்ரி கழகம், கொழும்பு கெடேரியன் கழகம், பரஹதெனிய இலவன் ஸ்டார் கழகம் ஆகியன பங்கேற்றன.  


விறுவிறுப்பாக நடைபெற்ற  போட்டிகளின் முடிவில் எவர்கிரீன் கழகம் மற்றும் கெடேரியன் கழகங்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. 


இறுதிப்போட்டி எவ்வித கோல்களையும் பெறாத நிலையில் சம நிலையில் முடிந்ததை தொடர்ந்து பெனால்டி முறையில் கெட்டேரியன் கழகம் சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது. 


இந்த சுற்றுத் தொடரின் சிறந்த கோல் காப்பாளராக எவர்கிரீன் அணியை சேர்ந்த இந்திக அவர்களும் சிறந்த தொடர் வீரராக கெட்டேரியன்ஸ் அணியை சேர்ந்த நியாஸ்  அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். 


வெற்றி பெற்ற அணிக்கு 50,000 பணப் பரிசும் வெற்றிக் கிண்ணமும் இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு 25,000 பணப்பரிசும் வழங்கப்பட்டன.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال