கற்பிட்டி தில்லையூர் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
(கற்பிட்டி - சியாஜ்)
கற்பிட்டி தில்லையூர் பாடசாலையின் குறைபாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக விஷேட கலந்துரையாடல் ஒன்று கடந்த ஜூம்ஆ தொழுகையை அடுத்து தில்லையூர் பள்ளிவாசலில் பேஷ் இமாம் மௌலவி றிப்கான் தலைமையில் இடம்பெற்றது.
கற்பிட்டி தில்லையூர் பாடசாலையின் கல்வி வளர்ச்சி தொடர்பாகவும் வளப் பற்றாக்குறை மற்றும் பெற்றோர்கள் ஊர் நலன்விரும்பிகளால் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் பாடசாலை அபிவிருத்திக் குழு நிர்வாகிகள் தமக்கு வழங்கி வரும் ஒத்துழைப்புக்கள் என்பவன பற்றிய முழுமையான விளக்கத்தை பாடசாலையின் அதிபர் எஸ்.எம் அரூஸ் கலந்து கொண்டவர்களுக்கு தெளிவூட்டினார். அதிபரின் கருத்துக்களை ஊரின் பெற்றோர்கள் பொது மக்கள் சார்பாக தாம் ஏற்றுக் கொள்வதாகவும் பொது மக்களால் முடியுமான அபிவிருத்தி உதவிகளை பாடசாலைக்கு பெற்றுத்தருவதற்கு முன்னின்று செயல்படுவதாக தில்லையூர் பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைவர் அன்வர்தீன் கருத்து தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் தில்லையூர் பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , தில்லையூர் பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments