Breaking News

கண்டல்குடா புதிய வீட்டுத்திட்டத்திற்கான மின் இணைப்புக்கான நிதி ஒதுக்கீடு

(கற்பிட்டி - சியாஜ்)

கற்பிட்டி கண்டல்குடாவில் அமையப்பெற்றுள்ள புதிய வீட்டுத்திட்டத்திற்கான மின்சார இணைப்புக்காக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 2024ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா. 13 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். 


மேற்படி வீட்டுத்திட்டத்தில் மின்சாரம் இன்றி மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் கற்பிட்டி முசல்பிட்டி வட்டார இணைப்பாளர் பீ.எம் மூஸினின் வேண்டுகோலுக்கிணங்க இந்த நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.


குறித்த வீட்டுத்திட்டத்தை பார்வையிடுவதற்காக பா.உ அலி சப்ரி றஹீம் அண்மையில் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன் போது பாராளுமன்ற உறுப்பினரின் முல்பிட்டி வட்டார இணைப்பாளர் பீ.எம் மூஸின் கற்பிட்டி அமைப்பாளர்  யூ.எம் ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.







No comments