கண்டக்குழி தங்கெல பகுதியில் குளிரூட்டி லொறியில் பீடி இலை கடல் அட்டைகள் கைப்பற்றல்
(கற்பிட்டி - சியாஜ்)
கற்பிட்டி கண்டக்குழி, தங்கெல பகுதியில் வைத்து பெருந்தொகையான பீடி இலைகள் மற்றும் கடல் அட்டைகளை இன்று(28) கற்பிட்டி பொலிஸாரின் சுற்றி வளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.
கண்டக்குழி கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் 61 உறைகளும் மற்றும் கடல் அட்டைகள் 06 உறைகளூம் கண்டக்குழி கடற்கரையிலிருந்து வெளி ஊருக்கு கொண்டு செல்லும் வழியில் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.ஏ.டப்யூ.எஸ். எதிரிசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர்களான உபுல்(60960), பண்டார(59812), வண்ணிநாயக்க(80413) ஆகியோரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது இக்கடத்தல் சம்பவத்துக்கு பயண்யடுத்தப்பட்ட குளிருட்டி லொறியும் வாகனத்தின் சாரதி புத்தளத்தைச் சேர்ந்தவரும் மற்றைய கற்பிட்டி ஜனசவிபுரயைச் சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பற்ற பீடி இலைகள் மற்றும் கடல் அட்டைகளின் பெறுமதி சுமார் 3.5 கோடி எனவும் மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
No comments