Breaking News

புத்தளம் - கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியின் மூன்றாம் நாள் நிகழ்வு!.

புத்தளம் - கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த  இல்ல விளையாட்டுப் போட்டியின் மூன்றாம் நாள் நிகழ்வு நேற்று (27) பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.


பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி தலைமையில் இடம்பெற்ற இல்லங்களுக்கிடையிலான பெண்களுக்கான கூடைப்பந்து (Netball) போட்டி இடம்பெற்றது.


இப்போட்டி நிகழ்ச்சியில் நடுவராக தேசிய கூடைப் பந்து (Netball) சம்மேளத்தின் அங்கத்தவரும், பு/பெருக்குவற்றான் சிங்கள வித்தியாலயத்தின் விளையாட்டுத்துறை ஆசிரியையுமான சிறிவதனி கலந்து கொண்டு நடுவராக பணியாற்றினார்.


இப்போட்டியில் முதலாம் இடத்தை கமர் இல்லமும், இரண்டாம் இடத்தைஸம்ஸ் இல்லமும், மூன்றாம் இடத்தை நஜ்ம் இல்லமும் பெற்றுக் கொண்டது.


குறித்த விளையாட்டில் மிகச் சிறப்பாக விளையாடி தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளை பாராட்டிய நடுவர் குறுகிய காலப்பகுதியில் பயிற்சி பெற்று சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளை பாராட்டியதோடு, இம்மாணவிகளை தம்மிடம் பயிற்சிக்காக ஒப்படைத்தால் சிறந்த முறையில் பயிற்றுவித்து கோட்ட, வலய மட்டப் போட்டிகளில் பங்குபெறச் செய்யலாம் எனக் கூறினார்.


இதன்போது பாடசாலையின் அதிபர் தனது சார்பாகவும், பாடசாலை சமூகம் சார்பாககவும் நடுவருக்கு நன்றி  தெரிவித்தார்.


இதேவேளை அன்றைய தினம் மாலை வேளையில் இல்லங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி இடம்பெற்றது.


விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் முதலாமிடம் ஸம்ஸ் இல்லமும், இரண்டாமிடம் நஜ்ம் இல்லமும், மூன்றாமிடம் கமர் இல்லமும் பெற்றுக் கொண்டனர். 


இந்நிகழ்விற்கு கனமூலை அல் - அன்வார் விளையாட்டுக் கழகம் பூரண அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.















No comments