Breaking News

பெருக்குவற்றான் பேர்ள் பாலர் பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியும், பரிசளிப்பு விழாவும்!.

பெருக்குவற்றான் பேர்ள் பாலர் பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியும், பரிசளிப்பு விழாவும் நேற்று முன்தினம் (10) பாடசாலையின் பிரதம ஆசிரியை பாத்திமா ஹரீஸா தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் அதிதிகளாக பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியை ஷர்மிளா சீனத், பெருக்குவற்றான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியை நஜீலா மற்றும் நல்லாந்தழு அல் - மதீனா பாலர் பாடாசாலை ஆசிரியை ஹன்ஸா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இதன்போது வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால்  பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.


குறித்த நிகழ்வில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஊர் மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


























No comments