JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் பூரண அனுசரணையில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட தொடர்.

 (எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் பூரண அனுசரனையில் பரஹதெனிய நகரில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணிக்கு ஏழு பேர் கொண்ட உதைபந்தாட்ட தொடர் ஒன்று அண்மையில் (10, 11) பரஹதெனிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. 


24 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சீ. அணி மற்றும் பம்மண்ண சார்ஜா எப்.சீ. அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. 


இறுதிப் போட்டியில் வை.எஸ்.எஸ்.சீ அணி 06 : 01 என்ற கோல் அடிப்படையில் வெற்றி கொண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது. 


இந்த சுற்றுத் தொடரின் சிறந்த கோல் காப்பாளராக வை.எஸ்.எஸ்.சீ. அணியை சேர்ந்த முஸ்தாக்கும், சிறந்த தொடர் வீரராக அதே அணியை சேர்ந்த முன்சிபும் தெரிவு செய்யப்பட்டனர். 


வெற்றி பெற்ற அணிக்கு 50,000 பணப் பரிசும் வெற்றிக் கிண்ணமும்,  இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு 25,000 பணப்பரிசும் வழங்கப்பட்டன.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال