JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தினால் புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு போட்டோகொப்பி இயந்திரம், நவீன ஒலிபெருக்கி அன்பளிப்பு!

புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற இலங்கை கடற்படை மற்றும் ஏறாவூர் அணிகளுக்கு இடையிலான கண்காட்சி உதைபந்தாட்ட போட்டியில் கிடைக்கப் பெற்ற மொத்த வருமானமான 93,200/= பணத்தை கொண்டு புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலை வளர்ச்சிக்காக போட்டோகொப்பி இயந்திரம் ஒன்றும் நவீன ரக ஒலிபெருக்கி ஒன்றும் புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் முனவ்வர் அவர்களிடம் புத்தளம் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற ஆயுர்வேத வைத்தியர்களின் கூட்டத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.


புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிசாம், புத்தளம் உதைபந்தாட்ட நடுவர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.பஸ்ரின், புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் தலைவர் ஜனோசன் மற்றும் உறுப்பினர் பினோஸ் ஆகியோர் லெஜன்ட்ஸ் கழகத்தின் சார்பில் இவைகளை கையளித்தனர்.


படங்கள்: எம்.யூ.எம்.சனூன்





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال