Breaking News

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம் முன்னெடுக்கின்ற தொடர்ச்சியான இரு நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் -தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்.

(எஸ். அஷ்ரப்கான்)

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம் முன்னெடுக்கின்ற தொடர்ச்சியான இரு நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை  தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வழங்கும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கச் செயலாளர்  எம்.எம்.முகமது காமில் தெரிவித்தார்.


நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம் முன்னெடுக்கின்றதொடர்ச்சியான இரு நாட்கள் அடையாள வேலை நிறுத்தம் எதிர் வருகின்ற 28.02.2024 மற்றும் 29.02.2024 அதாவது நாளை மற்றும் நாளை மறுதினமும் தென் கிழக்கு  பல்கலைக்கழகத்திலும் நடைபெறுகின்றது.


இன்று 27.02.2024, இடம் பெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் விஷேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி  அது குறித்து கருத்து தெரிவித்தபோதே காமில் மேற்கண்டவாறு கூறினார்.


மேலும் அவர் குறிப்பிடும் போது,


மேற்குறித்த தொழிற்சங்க போராட்டத்தில்  ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுதல் வேண்டும். அதேபோல இவர்களது வரவு தொடர்பாக அந்தந்த பகுதிகளுக்கான பிரதிநிதிகள் உரிய கரிசனை காட்டுதல் வேண்டும்.


முதலாவது நாள் அதாவது நாளை 28.02.2024 எமது பல்கலைக்கழக நுழைவாயில் முன்றலிலும்,


இரண்டாவது நாள் 29.02.2024, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் நுழைவாயிலிலும் எமது அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.


மேற்குறித்த இரு தினங்களிலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.




No comments