Breaking News

புத்தளம் - கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்வு!.

புத்தளம் - கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த  இல்ல விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று (26) பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.


பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி தலைமையில் இடம்பெற்ற இல்லங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டம், காற்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் இடம்பெற்றன.


இப்போட்டி நிகழ்ச்சியில் காலையில் இடம்பெற்ற காற்பந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தை நஜ்ம் இல்லமும், இரண்டாம் இடத்தை கமர் இல்லமும், மூன்றாம் இடத்தை சம்ஸ் இல்லமும் பெற்றுக் கொண்டது.


இதேவேளை  மாலையில் இடம்பெற்ற கரப்பந்தாட்டப் போட்டியில் முதலாம் இடத்தை நஜ்ம் இல்லமும், இரண்டாம் இடத்தை ஸம்ஸ் இல்லமும், மூன்றாம் இடத்தை கமர் இல்லமும் பெற்றுக் கொண்டது.


இப்போட்டி நிகழ்வின்ன் போது பழைய மாணவர்களால் பாடசாலைக்கு பந்தும், நெட்டும் அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது. 



















No comments

note