பு/கஜுவத்த முஸ்லிம் அரசினர் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா!.
புத்தளம் - தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட பு/கஜுவத்த முஸ்லிம் அரசினர் வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா இன்று (22) பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் இஸட்.ஏ.ஸன்ஹீர் (கபூரி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். பாஸில் உள்ளிட்ட சிரேஷ்ட ஆசிரியர்களின் நெறிப்படுத்தலோடு, பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவச் செல்வங்கள் பங்குபற்றலோடு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments