தேசிய மக்கள் சக்தி புத்தளம் கிளையின் சிரமதானம்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் தகர கிளையின் சிரமதான வேலைத்திட்டத்தின் முதலாவது நிகழ்வு பெப்ரவரி 04 ம் திகதி புத்தளம் முதலாம் வட்டார தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மஸ்ஜிதுல் பகா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள வெட்டுக்குளக் கட்டில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பகா பசுமை வேலைத்திட்ட பூங்காவில் நடைபெற்றது.
மேற்படி முதலாவது சிரமதான பணிக்காக பூங்காவில் மரங்களை வைத்து தோப்பாக உருவாக்கிய எஸ்.ஏ.எம் சியாத் இன் கோரிக்கையின் பேரில் இவ்விடம் தெரிவு செய்யப்பட்டு அச் சூழலில் காணப்பட்ட குப்பைகள் மற்றும் வெட்டுக்குளத்தின் கழிவுகள் அகற்றப்பட்டன. இச் சிரமதான பணியில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் நகர முதலாம் வட்டார சபை உறுப்பினர்களுடன் ஏனைய வட்டார சூழல் ஆர்வலர்களும் கலந்து கொண்டமையும் குறிப்பிடதக்கது.
No comments