புத்தளத்தில் - "லெஜன்ட்ஸ் சுப்பர் லீக்" மாபெரும் உதைப்பந்தாட்ட தொடர்!.
(எம்.யூ.எம்.சனூன்)
கடந்த சில மாதங்களாக புத்தளம் நகரில் தலைசிறந்த உதைபந்தாட்ட போட்டித் தொடர்களை நடாத்திய புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் ஸ்தாபகர் முஹம்மது யமீன் அவர்களின் முயற்சியில் "லெஜன்ட்ஸ் சுப்பர் லீக்" எனும் பெயரில் அணிக்கு ஒன்பது பேர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட தொடர் 02 ம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
மொத்தமாக எட்டு அணிகள் கலந்து கொள்ள உள்ள இந்த தொடரில் புத்தளத்தை சேர்ந்த இரண்டு அணிகள் மற்றும் புத்தளம் மாவட்டத்துக்கு வெளியில் உள்ள ஆறு அணிகள் பங்குபற்ற உள்ளன.
புத்தளம் அணிகள் சார்பாக புத்தளம் லிவர்பூல் கழகம் மற்றும் நிவ் ஸ்டார்ஸ் கழகங்கள் பங்கு பற்ற உள்ளன.
வெளி மாவட்ட அணிகளாக
ட்ரின்கோ எப்.சி திருகோணமலை, கார்டியன் எப்.சி. குருநாகல்,
எவர்க்ரீன் கழகம் கலகெதர,
லைட் இன்பென்ட்ரி கழகம் கண்டி,
கெடேரியன் கழகம் கொழும்பு
இலவன் ஸ்டார் கழகம் பரஹதெனிய ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
இலங்கை இராணுவ அணி வீரர்கள், கடற்படை அணி வீரர்கள் மற்றும் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணி வீரர்கள் என பல்வேறு வீரர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.
No comments