புத்தளம் இலவன்குளம் பாடசாலை சமூகத்தின் முன்மாதிரி செயற்பாடு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
புத்தளம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஒரு பின்தங்கிய பாடசாலையாக காணப்படும் இலவன்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஒரு குக்கிராமப் பாடசாலை என்பதுடன் தனிமையில் (Isolated) அமைந்துள்ளது
இலவன்குளம் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் வறியோராவர்.
தூரத்தில் அமைந்துள்ள மேற்படி பாடசாலைக்கு வேறு பிரதேசங்களில் இருந்து ஆசிரியர்கள் இப்பாடசாலைக்கு வர விரும்புவதில்லை. இந்நிலையில் இப்பாடசாலையில் 33 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றியவர் இக்கிராமத்தை சேர்ந்த ஏ.டி.எம் இஸ்மாயில் பின்னர் இவர் பிரதி அதிபராகவும் சேவையாற்றி அண்மையில் ஓய்வுபெற்றார்.
அந்நாருக்கான பிரியாவிடையின்போது இப்பாடசாலை சமூகம் மூன்று முன்மாதிரியான நிகழ்வுகளை நடாத்தியுள்ளது.
பணிநலன் பாராட்டு விழாவின்போது அவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது, 'முற்றத்து முதிசம்' என்ற சஞ்சிகை ஒன்றும் வெளியிடப்பட்டது. மற்றும் சுமார் ஐந்து இலட்சம் ரூபா செலவில் அன்னாரை மக்கா நகருக்கு புனித உம்ரா கடமைக்காக அனுப்பிவைத்தல் என்ற செயற்பாடுகளை நிகழ்த்தியுள்ளது.
இன்றைய கால சூழலில் இவ்வாறான இலவன்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்திபாலய பாடசாலை சமூகத்தின் முன் மாதிரியான முயற்சியும் செயற்பாடும் சகலர் மத்தியிலும் வரவேற்பை பெற்ற விடயமாக காணப்படுகிறது.
No comments