JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் - எருக்கலம்பிட்டி மு.ம.வித்தியாலயத்திற்கு அன்பளிப்பு வழங்கிய சமூக சேவையாளர் ஜபருள்ளாஹ் ரஸ்மின்

ரிபாக்

புத்தளம் - எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலயத்திற்கு ஒருதொகை பிளாஸ்டிக் தும்புத்தடி உள்ளிட்ட பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.


குறித்த பாடசாலையின் ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் ஏ.நஜ்மி ஆசிரியர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, குறித்த பிளாஸ்டிக் தும்புத்தடி வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


Social welfare service அமைப்பின் தலைவரும் , நாகவில்லு RN Hardware உரிமையாளருமான ஜபருள்ளாஹ் ரஸ்மின் குறித்த பொருட்களை வழங்கி வைத்தார்.


புத்தளம் - எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கில் பாடசாலையில் உள்ள சகல வகுப்பறைகளுக்கும் குறித்த பிளாஸ்டிக் தும்புத்தடி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக பாடசாலையின் ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் ஏ.நஜ்மி ஆசிரியர் தெரிவித்தார்.


மேலும், தேவை ஏற்படும் போது பாடசாலைக்கு மாத்திரமன்றி, அனைவருக்கும் உதவிகளை மேற்கொண்டு வரும் சமூக சேவையாளரும், Social welfare service அமைப்பின் தலைவரும் , நாகவில்லு RN Hardware உரிமையாளருமான ஜபருள்ளாஹ் ரஸ்மின் அவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.




Previous Post Next Post

نموذج الاتصال