Breaking News

புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் வித்தியாரம்ப விழா!.

புத்தளம் - தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில்  தரம் ஒன்று மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா கடந்த  (22) பாடாசாலையில் மிகவிமர்சையாக இடம்பெற்றது.


பாடசாலையின் அதிபர் என்.எம்.எம். நஜீப்  அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் கல்வி அபிவிருத்திப் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம். அனீஸ், பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்தியக் கல்லூரி அதிபர்

எம்.எச்.எம். தௌபீக், பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.ஆர்.எம்.எம். முஹ்ஸி ஆகியோர் கலந்து கொண்டு தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கு உத்தியோகபூர்வமாக வித்தியாரம்பம் செய்து வைத்தனர்.


இந்நிகழ்வில்  முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்  பைசர் மரிக்கார், மதுரங்குளி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர், மதுரங்குளி இலங்கை வங்கி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இவ்வருடம் அனுமதி பெறும் புதிய  மாணவர்களுக்கு  "தலைகுனிந்து கற்போம். தலை நிமிர்ந்து வாழ்வோம்". என்ற தொனிப் பொருளை அறிமுகப்படுத்திய அதிபர் அவர்கள்  மாணவர்களின் ஆடைகளில்   அவ்வாசகம் கொண்ட ஸ்டிக்கர் அணிவிக்கப்பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.




















No comments