JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி தில்லையூர் பாடசாலையில் இல்லவிளையாட்டு ஆரம்பம்

(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)

கற்பிட்டி தில்லையூர் அரசினர் கனிஷ்ட வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


இவ் வருடத்திற்கான போட்டிகளின் ஆரம்பமாக மரதன் ஓட்டப் போட்டி இன்று காலை கற்பிட்டி பெரிய பள்ளிவாசலின் தலைவர் மௌலவி எஸ் எம்.எம் சாதிக் இனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம் அரூஸ் தலைமையில் இடம்பெற்றதுடன் பாடசாலையின் ஆசிரியர்கள் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال