கடையாமோட்டை - நல்லாந்தழுவை ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் இடம்பெற்ற இலவச ஆயுர்வேத சிகிச்சை முகாம்.
(எம்.யூ.எம்.சனூன்)
மதுரங்குளி - கடையாமோட்டை - நல்லாந்தழுவை ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் இலவச ஆயுர்வேத சிகிச்சை முகாம் அண்மையில் (14) ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் இடம்பெற்றது.
மத்திய மருந்தகத்தின் வைத்தியர் றிழ்வானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இலவச சிகிச்சை முகாமில் நீரிழிவு, இரத்த அழுத்த பரிசோதனை, நிரை பார்த்தல், ஹிஜாமா (Cupping), அக்குபஞ்சர் சிகிச்சை, தோல் நோய், குழந்தை நோய்கள் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட்டன.
குறித்த வைத்திய முகாமில் வடமேல் மாகாண ஆயுர்வேத பிரதி ஆணையாளர் வைத்தியர் கே.சிவதரன், வைத்தியர்களான எம்.எஸ். முனவ்வர், முஹம்மது றயீஸ், நிஹார், பஹ்மி, சுமையா, பாஹிம், நஸ்லத், றிழ்வானா ஆகியோர் கலந்து கொண்டு நோயாளர்களுக்கு இலவச சிகிச்சையளித்தனர்.
இதன்போது சுமார் 200 க்கு மேற்பட்ட நோயாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments