JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தரம் - 6 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

 (எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் தெற்கு கல்வி கோட்டத்துக்குட்பட்ட கொத்தா ந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆறாம் தரத்துக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நிகழ்வுகள் திங்களன்று (19) காலை மிக விமரிசையாக நடைபெற்றது.


பாடசாலை வளாகத்தில் அதிபர் கே.டீ.ஹாரூன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


புதிதாக இணைந்த ஆறாம் தர மாணவர்கள் மலர் செண்டுகள் வழங்கி வரவேற்கப்பட்டனர்.


இதன்போது மெருகூட்டப்பட்ட ஆறாம் தர மாணவர்களுக்கான வகுப்பறை கட்டட தொகுதியையும் அதிதிகள் திறந்து வைத்தனர்.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال