தேங்காய் பறிப்பவர் அரச ஊழியரை விட வசதியாக வாழ்கிறார் - பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க
இன்று மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பவர் அரசாங்க ஊழியரை விட வசதியாக வாழ்கிறார் என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான துமிந்த திசானாயக்க கூறுகிறார்.
அரசாங்க ஊழியருக்கு கிடைப்பது குறைந்த சம்பளமாகும் ஆனால் மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பவர்கள், மேசன், ஓடாவி உட்பட வேறு பல தொழில்களை செய்பவர்களுக்கு பொருட்களின் விலையேற்றத்துக்கு ஏற்ப அவர்களின் ஊதியத்தை அதிகரித்துப் பெற்றுக் கொள்கிறார்கள் ஆனால் அரசாங்க ஊழியர்களுக்கு அவ்வாறு இல்லை சம்பளத்தை பெரும் அரசாங்க ஊழியர் சம்பளத்தில் கடன் பெற்ற வங்கிக்கு தவணை கட்டணத்தை வழங்குகிறார். OT போன்ற மேலதிக உழைப்பின் மூலமே உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர் இப்போது இவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
No comments