பு/புழுதிவயல் முஸ்லிம் வித்தியா லயத்தில் இடம் பெற்ற 76வது சுதந்திர தின நிகழ்வு!.
பு/புழுதிவயல் முஸ்லிம் வித்தியா லயத்தில் இடம் பெற்ற 76வது சுதந்திர தின நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம். றிபாய்தீன் தலைமையில் நேற்று (04) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் தேசியக் கொடியினை ஏற்றி வைக்க மாணவர்களால் தேசியக் கீதம் இசைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் புழுதிவயல் ஜும்ஆப் பள்ளித் தலைவர் உட்பட உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
No comments