35 வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து ஒய்வு பெற்றார் - அதிபர் ஏ.எம். நஜீப்தீன்
(எம்.யூ.எம்.சனூன்)
புத்தளம் ஏத்தாளை அரசினர் ரோமன் கத்தோலிக்க கலவன் தமிழ் பாடசாலையின் அதிபர் ஏ.எம். நஜுப்தீன் அவர்கள் 35 வருடகால ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறுவதையொட்டி பிரியாவிடை நிகழ்வுகள் அண்மையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
நஜுப்தீன் ஆசிரியர் அவர்கள் சுமார் 15 வருடகாலமாக இரு மொழி பாடசாலையாகிய இப்பாடசாலையின் அதிபராக சேவை செய்த நிலையில் 06/02/2024 அன்று ஓய்வு பெற்று செல்கிறார்.
இவருக்கான பிரியாவிடை நிகழ்வில் புத்தளம் வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எச். எம். அர்ஜுன, கல்பிட்டி கோட்ட கல்வி பணிப்பாளர் என்.எம். ஆர். டி. பெர்ணாண்டோ, புத்தளம் வடக்கு கோட்ட கல்வி பணிப்பாளர் ஏ.அஸ்கா, வலய கல்வி ஆசிரியர் பிரிவு பொறுப்பாளர் காந்தி லதா, பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் மற்றும் மாணவர்கள் யாவரும் கலந்து கொண்டனர்.
No comments