மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் உருவானவை அல்ல உருவாக்கப்பட்டவை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
நாட்டில் மக்கள் அனுபவித்து வருகின்ற பொருளாதாரப் பிரச்சினைகள் உட்பட்ட சகல பிரச்சனைகளும் இயற்கையாக உருவானவை அல்ல அவை உருவாக்கப் பட்டவை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டுகிறார்.
நாரம்மல பிரதேசத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள் மக்களின் வரிப்பணத்தில் உலகம் எங்கும் சவாரி செல்கிறார்கள் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்ற 17 மாதங்களில் 18 முறை வெளிநாடு சென்றுள்ளார். மக்களின் வரிப்பணத்தை இவ்வாறு நாசம் செய்ய இடமளிக்க முடியாது. போதாக்குறைக்கு மேலும் 200 மில்லியன் ரூபாய்களை ஜனாதிபதி தனக்காக ஒதுக்கியுள்ளார். பொது மக்களின் கஷ்டங்களை இவர்கள் கொஞ்சம் கூட மதிப்பதில்லை விக்ரமசிங்க, ராஜபக்ஷ ராஜபக்ஷ ஆட்சியையே பின்பற்றி வருகிறார்.
நாட்டை சிங்கப்பூர் ஆக்குவதாக கூறிய ஜனாதிபதி மக்களின் கஷ்டங்களை அதிகரித்தது மட்டுமல்லாது மக்களின் கஷ்டங்களை நீக்க இதுவரை எதனையும் செய்யவில்லை கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியும் இதுவரை செய்யப்படவில்லை ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ஒரு அரசாங்கம் என்ற வகையில் பாதிப்புகளை ஈடு செய்ய நியாயத்தை நிலைநாட்டும் இதற்காக தேர்தல்களை எதிர்பார்த்து நிற்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments