Breaking News

புத்தளம் நகர சபைக்கு ஐந்து டைடோ ஒரு டெக்டர் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் வழங்கினார்.

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

புத்தளம் நகரில் அதிகரித்து வரும் குப்பைகள் அகற்றுவதில் ஏற்படும் தாமதத்திற்கு காரணமாக மனித வளம் மற்றும் இயந்திரப் பற்றாக்குறை காணப்படுவதாக நகர சபை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டபோது புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நகர அபிவிருத்திக் குழுத் தலைவருமாகிய அலி சப்ரி றஹீம் இடம் சுட்டிக்காட்டபட்டது. 


இது விடயமாக மக்கள் சந்திப்புக்களின் போதும் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனது சொந்த நிதியின் ஊடாக ஐந்து டைடோ வண்டிகளையும் ஒரு டெக்டர் இயந்திரத்தையும் புத்தளம் நகர சபைக்கு பெற்றுத் தருவதாக உறுதியளித்து. வடமேல் மாகாண ஆளுநர் முன்னிலையில் வண்டிகளையும் அதற்கான ஆவணங்களையும் புத்தளம் நகர சபை செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் கையளித்தார்.


இதன் ஊடாக இனிவரும் காலங்களில் தினசரி வீடுகளில் காணப்படும் உணவுக் கழிவுககளை தனியாக பிரித்து அன்றாடம் உலா வரும் டைடோக்களுக்கு வழங்குவதன் மூலம் சுகாதாரமான வீடாக தமது வீடுகளை புத்தளம் மக்கள் வைப்பதற்கு வசதியாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.










No comments

note