புத்தளம் - கொழும்பு முகத்திடலில் புத்தாண்டு கொண்டாட்டம்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் தலைமையில் வரலாறு காணாத மக்கள் கூட்டத்தினருடன் 2024 புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் புத்தளத்தில் உள்ள கொழும்பு முகத்திடல் கடற்கரையில் சிறப்பாக இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட மக்கள் மற்றுமின்றி வெளி மாவட்ட மக்களும் இம்முறை புத்தளம் கடற்கரையில் ஒன்று கூடியதனைக் காணக்கூடியதாக இருந்தது. புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் புத்தாண்டு கொண்டாட்டத்தினை வான வேடிக்கையுடன் "அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு" என்ற கருப்பொருளுடன் 2024 ம் ஆண்டை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடதக்கது.
No comments