புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையிக்கான வாயிற் காவலாளி அறை அமைப்பதற்கு உதவி வழங்கிய 80 இன் சா/த சஹிரியன் ஹீரோஸ்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் )
புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையிக்கான வாயிற் காவலாளி அறை அமைப்பதற்கு பாடசாலை அதிபரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோலுக்கு இனங்க புத்தளம் சாஹிரா பாடசாலையின் 80 இன் சா/த சாஹிரியன் ஹீரோஸ் வகுப்பினரால் சீமெந்து பக்கட்டுக்கள் பாடசாலையின் அதிபர் ஏ.எம் ஜவாத் வசம் கையளிக்கப்பட்டது.
மேற்படி சீமெந்து பக்கட்டுக்களை 80 இன் சா/த சாஹிரியன் ஹீரோஸ் இன் ஊடக இணைப்பாளர் எம்.யூ.எம் சனூன் மற்றும் அமைப்பாளர் எஸ்.எம் இஹ்தியாஸ் ஆகியோரால் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபர் ஏ.எம் ஜவாத் இடம் கையளிக்கும் நிகழ்வின் போது பாடசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர் ஏ.எச்.எம் றிஸான் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம் றிமாஸ் ஆகியோரும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
No comments