புத்தளம் அல்-கலம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
புத்தளம் அல்-கலம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு புத்தளத்தில் உள்ள கே. ஏ. பாயிஸ் மண்டபத்தில் அல் - கலம் கல்வி நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் வைத்தியர் சஜீத் அவர்களின் தலைமையில், அதிபர் அல் காரி எம். டீ. எம். பெளஸான் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், விசேட அதிதிகளாக மதுரங்குளி மேர்சி லங்கா கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் முனாஸ், புத்தளம் கதீஜா பெண்கள் அரபுக் கல்லூரியின் நிர்வாகத் தலைவர் அல்ஹாஜ் ஜஃப்ரிஷ், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் பிரமுகர் உட்பட பல சிறப்பு அதிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தாம் ஆரம்பித்துள்ள BCMH நிறுவனம் புத்தளம் மாவட்டத்தில் "அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு" எனும் இலக்குடன் அதன் வேலைத் திட்டத்தை ஆரம்பித்து சகல பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மற்றும் பாடசாலைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றமையையும் குறிப்பிட்டார்.
மேலும் இந்நிகழ்வில் புத்தளம் அல் - கலம் கல்வி நிறுவனத்திற்காக புத்தளம் மன்னார் வீதியில் சுமார் 2 கோடி பெறுமதியான காணி ஒன்றினை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் தமது சொந்த நிதியிலிருந்து BCMH நிறுவனத்தின் ஊடாக வழங்கி வைத்தமையையும் நினைவு கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments