தென்கிழக்கு பல்கலையில் வணிக நிர்வாக முதுநிலை கற்கை நெறி மற்றும் முகாமைத்துவ முதுகலை உயர் டிப்ளமோ நெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் தொடக்க விழா!
நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுநிலை கற்கை நெறி மற்றும் முகாமைத்துவ முதுகலை உயர் டிப்ளமோ (Postgraduate Diploma in Management & Master of Business Administration) ஆகிய கற்கை நெறிகளை 2022/2023 ஆம் கல்வியாண்டில் தொடர்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள, 12 வது கட்ட மாணவர் அணியினரை இணைத்துக்கொள்ளும் தொடக்கவிழா, Board of Study (PGDM/MBA) இன் தலைவர் பேராசிரியர் கலாநிதி எம்.ஐ.எம். ஹிலால் தலைமையில் 2023.12.17 ஆம் திகதி வர்த்தக முகாமைத்துவ பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வில் விசேட அதிதியாக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.சபீனா எம்.ஜி.எச். அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கௌரவ அதிதியாகவும் பிரதான பேச்சாளராகவும் Richlife Dairies Ltd நிறுவனத்தின் தலைமை இயக்குனர் தினேஷ் நல்லையா அவர்கள் நிகழ்நிளையாக கலந்துகொண்டு உரையாற்றினார்.
முதுகலை பிரிவின் இணைப்பாளரும் நிகழ்வின் ஏற்பாட்டாளருமான பேராசிரியர் எஸ். குணபாலன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
குறித்த கல்வியாண்டுக்காக கற்கை நெறியை தொடர்வதற்கு 25 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments