புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவராக ரணீஸ் தெரிவு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் நலன்புரி சங்கத்தின் புதிய தலைவர் தெரிவிற்கு கடும் போட்டி நிலவியது இதற்காக 532 பேர் தமது வாக்குகளை பதிவு செய்தனர் இதில் 318 வாக்குகளை பெற்று ரணீஸ் பதியுதீன் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் வாக்கெடுப்பின் மூலமே தெரிவு செய்யப்பட்டனர். அதிகபடியான வாக்குகளைப் பெற்ற ஆறு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விபரம்
றிஸ்வான் , ஜவ்பர் , நிஸ்பாக், ஆதில், கலீல் ரஹ்மான் , சகீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேற்படி வாக்கெடுப்பில் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹும் கலந்து கொண்டதும் குறிப்பிட்டதக்க விடயமாகும்.
No comments