Magspot Blogger Template

ஜனாஸா அறிவித்தல் - கனமூலையைச் சேர்ந்த காலம் சென்ற ஹமீது ஹுஸைன் (JP) அவர்களின் அன்பு மனைவி ஹாஜியானி மைமூன் நாச்சியா அவர்கள் காலமானார்.

விருதோடையை பிறப்பிடமாகவும், கனமூலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஹாஜியானி சேகு அப்துல் காதர் மைமூன் நாச்சியா அவர்கள் காலமானார்கள்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் 


அன்னார் காலம் சென்ற அல்ஹாஜ் காதர்சா மரைக்கார்   ஹமீது ஹுஸைன் (JP) அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான அபூதாஹீர், அன்வர், அஷ்ஷெய்க் நஜீம் ஷர்கி (கனமூலை பெரிய பள்ளி தலைவர்), ஹபீபா உம்மா, பேகம், ஸம்ரூஸ், ஆகியோரின் அன்புத் தாயும், காலம் சென்றவர்களான T.M.மரைக்கார், அப்துல் காஸிம் மற்றும் அபுல் ஹஸன் மௌலவி (முன்னாள் அதிபர் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயம்), காலம் சென்ற ஸைதா   பேகம், பிந்து நஸீரா, உம்முல் மர்லியா ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (22) இரவு  8.00 மணிக்கு கனமூலை நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.






Previous Post Next Post

ads

Magspot Blogger Template

ads

Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال