Breaking News

அதிபர், ஆசிரிய ஆலோசகர்களின் களப் பயணம்

(கற்பிட்டி எம்.எச.எம் சியாஜ் )

புத்தளம் வலயத்தின் வடக்கு கோட்ட அதிபர்களினதும் ஆசிரியர் ஆலோசகர்களினதும் திறன் கட்டமைப்பு வேலைத்திட்டத்தின் களப் பயண விஜயம் வியாழன்  புத்தளம் வடக்கு கோட்டத்தில் உள்ள சகல அதிபர்களையும் உள்ளடக்கியதாக  புத்தளம் வடக்கு கோட்ட கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்கா அஜிஹர் தலைமையில் இடம்பெற்றது.


இக் களப் பயணம் கற்பிட்டி நிர்மல மாதா சிங்கள பாடசாலை, றோமன் கத்தோழிக்க தமிழ் பாடசாலை மற்றும் கற்பிட்டி முகத்துவாரம் முஸ்லிம் பாடசாலை, சிங்கள பாடசாலைகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்ததுடன் அப் பாடசாலைகளின் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் முழுமையாக அவதானிக்கப்பட்டதுடன்  மேற்பார்வை செய்யப்பட்டமையும் குறிப்பிடதக்கவிடயமாகும்.




No comments

note