கல்வி புலமைப் பரிசில் தொடர்பான நிகழ்நிலை அமர்வு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பானது “பாத்வெய்ஸ் டு எக்ஸலன்ஸ் அன்வெலிங் எடியுகேஷனல் ஸ்கொலர்ஷிப் ”என்ற தொனிப்பொருளில் கல்வி புலமைப்பரிசில் தொடர்பான அமர்வு ஒன்றை நிகழ்நிலையில் 2023/12/16 ம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படிப்புக்கான புலமைப்பரிசிலை பெறுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் நிகழ்வுக்கு பொறுப்பான ஹப்ஸான் தொலைபேசி இல 078 136 79 29 என்பவற்றுடன் தொடர்புகொள்ளுமாறு இளம்கலை பட்டதாரிகள் அமைப்பின் தலைவர் ஷவ்வாப் றிபாயிஸ் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
No comments