Breaking News

டி.பி.ஜாயா ஞாபகார்த்த குத்துச் சண்டைப் போட்டி, புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி செம்பியன்

(கண்டி நிருபர் ஜே.எம். ஹாபீஸ்)

52 வது வருட டி.பி.ஜாயா ஞாபகார்த்த அகில இலங்கைப் பாடசாலைகள் குத்துச் சண்டைப் போட்டியில் கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி செம்பியனானது. (6)கடந்த ஐந்து தினங்களாக  கண்டி, அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலை வளாகத்தில் இடம் பெற்ற இப்போட்டிகளின் இறுதிப் போட்டி கடந்த புதன் கிழமை மாலைவ இடம் பெற்றது. 


இப்போட்டிகளின் பரிசளிப்பு வைபவத்தில் அகில இலங்கை குத்துச் சண்டை சம்மேளனத்தின் உபதலைவர் விதான வசந்த உதயகுமார கலந்து கொண்டார். இப்ஈபாட்டித் தொடரில் 24 பிரிவுகளில் 262 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 


கண்டி திருத்துவக் கல்லூரி, வெயங்கொட பண்டாரநாயக்கா வித்தியாலயம், ரத்தினபுரி சீவலி வித்தியாயலம், கண்டி சுமங்கள வித்தியாலயம், கண்டி கிஸ்ஸ்வூட் கல்லூரி, பிலிமத்தலாவ லங்காதிலக வித்தியாயலம், கொழும்பு நாலந்தா கல்லூரி, மஹாநாம கல்லூரி போன்றவற்றில் இருந்து போட்டியிட்ட பல  போட்டியாளர்களைப் பின் தள்ளி பின்வரும் போட்டியாளர்கள் வெற்றி பெற்றனர். 


தோல்வியடைந்தவர்களுன் சிறந்த போட்டியாளராக  (பெஸ்ட் லூசர்) வை.வீ.எம். பிரேமரட்ன (மவுண்டலெவேனிய புனித ஜோசப் கல்லூரி),  சிறந்த குத்துச் சண்டை வீரராக டி.எம்.டி. தென்னகோன்(புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி, கண்டி), தெரிவாகினர். 


மூன்றாம் இடத்திற்கு 2 தங்கம், 1 வௌ்ளி, 2 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று கடுகண்ணாவ தேசிய பாடசாலை தெரிவானது.  3 தங்கம், 3 வெண்கலப்பதக்கங்களைப் பெற்று பேராதெனிய மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. 


கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி 3 தங்கம், 1 வௌ்ளி, 1 வெண்கலப்பதக்கம் என்பவற்றபை் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. பரிசளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் காணலாம்.




No comments

note